கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதில் செயலாளராக அசின்சலா செனவிரெட்ன சத்திரயப்பிரமாணம்

0
192

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதில் செயலாளராக எச்.டி.அசின்சலா செனவிரெட்ன இன்று (22) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம முன்னிலையில் சத்திரயப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் பிரதம செயலாளர் செயலகத்தின் உதவிச்செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட இந்நியமனத்தை தான் சிறந்த முறையில் நீதியாகவும் நியாயமாகவும் செயற்படுத்துவதாகவும் கிழக்கு மாகாண மக்களுக்கு நேர்த்தியான சேவையை மேற்கொள்வேன் எனவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.திஷாநாயக்க ஆளுநரின் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSC_1225

LEAVE A REPLY