இத்தனை மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா ஆலிவ் ஆயில்….!

0
597

ஆலிவ் ஆயிலை சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்த விரும்பினால் அதற்கும் எக்ஸ்ரா விர்ஜின் ஆயில்தான் சிறந்தது. ஏனென்றால் அது ரசாயனக் கலப்படம் இல்லாதது. சருமத்திற்கும் நல்லது. குளிக்கும்போது தண்ணீரில் ஆலிவ் ஆயிலுடன் சில துளி லாவண்டர் எசென்ஷியல் ஆயிலையும் சேர்த்து குளிக்கலாம்.

இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம் 72% என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பான லோ டென்சிடி லைபோபுரோடீன் அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது.

ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும். தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

நம் உடம்பில் தினம் புது செல்கள் உருவாகி பழைய செல்கள் உதிருகின்றன. சிறிது சர்க்கரையும் ஆலிவ் ஆயிலும் கலந்து முகத்தில் தேய்த்தால் மிகுதியான இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும். உடலின் மற்ற பகுதியில் ஆலிவ் ஆயிலும் கடல் உப்பும் கலந்து தேய்க்கலாம்.

கூந்தலுக்கு ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் கூந்தல் வலுவானதாகவும், அடர்த்தியாவதுடன் கூந்தல் செழுமையாகவும் காட்சி தரும். ஆலிவ் ஆயில் உங்கள் கூந்தலுக்கு டீப் கண்டிஷனராகவும், பொடுகுத் தொல்லை தீரவும் உதவும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

LEAVE A REPLY