கத்திமுனையில் வங்கிக் கொள்ளை; 10 லட்சம் ரூபாய் பறிபோனது

0
132

தனியார் வங்கியொன்றில் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி சுமார் 10 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

கிரிபத்கொட பகுதியிலுள்ள வங்கியொன்றிலேயே இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது.

வங்கியினுள் வாடிக்கையாளர் போல் நுழைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, வங்கியின் காசாளர் பகுதியிலிருந்து 09 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட நபர் தப்பிச் சென்றுள்ளார்.

கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY