மகாவலியை மையப்படுத்திய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸாரிடம் அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை

0
167

(அப்துல்சலாம் யாசீம்)

மகாவலியை மையப்படுத்திய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினரும்,மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டதில் 30 வருட காலமாக வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிப்புற்ற இளைஞர் யுவதிகளுக்கு எமது மாவட்டத்திலுள்ள மண் அகழ்வதற்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவதினால் அவர்களது குடும்ப சுமைகளை போக்க முடியும். முறையற்ற மண் அகழ்வினால் கடந்த மூன்று கருட காலமாக மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. அத்துடன் மண் அகழ்வினால் பல அனர்த்தங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னால் கிண்ணியாவில் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் மூதூரில் 42 கிராம உத்தியோகத்தர பிரிவுகள் காணப்படுவதாகவும் கிண்ணியாவில் இரண்டு பாலங்களும் கடந்த காலங்களில் இவ்வாறான அணர்தங்களினால் உடைக்கப்பட்டு 21 நாட்கள் போக்குவரத்தழல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.DSC_1147

இதே ஒரு வாரத்திற்கு மண் அகழ்வை உடனடியாக நிறுத்தி கள்ளத்தனமாக உரிய அதிகாரிகளினால்
வழங்கப்படுகின்ற மண் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை உடன் நிறுத்துமாறும் பொலிஸார் பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு நாளைக்கு 800 ற்கும் 1000ற்கும் அதிகமான மணல் டிப்பர்களில் ணருநாளைக்கு ஜநூறு லோட் மணல் எடுத்து செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இங்கிருந்து மணலை ஏற்றிச்செல்கின்றவர்கள் கூட பழைய திகதிகளை திருட்டுத்தனமான மாற்றி அனுமதிப்பத்திரத்தை காட்டி மணல் ஏற்றி செல்வதாகவும் இதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கையினை விடுத்தார்.

LEAVE A REPLY