குளிர்கால பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது: அமெரிக்கா முதலிடம்

0
207

2018 குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் (12-வது குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் கேங்வான் மாகாணத்தில் உள்ள பியாங்சங் நகரில் கடந்த 9-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இதில் 49 நாடுகளை சேர்ந்த வீரர்- வீராக்கனைகள் கலந்துகொண்டனர். ரஷ்யாவை சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டது நிருபிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டிக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. இதையடுத்து அந்நாட்டின் வீரர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர்.

வடகொரியா, ஜார்ஜியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் முதன்முதலாக பங்குபெறுகின்றன. இந்த போட்டியில் ஐஸ் ஸ்லெட்ஜ் ஆக்கி, பனிச்சறுக்கு உள்பட 6 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 48 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

winter paralympicsஇதில் அமெரிக்கா அணி 13 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் தனிப்பட்ட வீரர்களாக களமிறங்கியவர்கள் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தனர். மூன்றாவது இடத்தை கனடா பிடித்தது. அந்த அணி 8 தங்கம், 4 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. பிரான்ஸ் நான்காவது இடத்தையும், ஜெர்மனி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

நேற்றுடன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. பியாங்சங் நகரில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவின் போது அனைத்து நாட்டு வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். தொடக்க விழாவை போல இந்த முறையும் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுப்பில் கலந்துகொள்ள தடை விதிப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் ஒலிம்பிக் கொடியை ஏந்தியவாறு அணுவகுப்பில் கலந்துகொண்டனர்.

நிறைவு விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகார்ப்பூர்வமாக ஒலிம்பிக் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதும் வானவெடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த காட்சியை அனைவரும் கண்டுகளித்தனர். இறுதியாக ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.

(Maalaimalar.com)

LEAVE A REPLY