(விசேட நிருபர்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சேகரித்த நிதி 18.3.2018 ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் சேகரிக்கப்பட்ட இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் திகன பகுதியில் பாதிக்கப்பட்ட மேற்படி மக்களை நேரடியாகச் சென்று பாடர்வையிட்டதுடன், மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் பிரகாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களை இணங்கண்டு அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில் மேற்படி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
3,859,890.00 ரூபா நிதி சேகரிக்கப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல், மட்டக்களப்பு ஸலாமா விளையாட்டுக்கழகம் மற்றும் WAIT அமைப்பு ஆகிய நிறுவனங்கள் இந்த நிதியை மக்களிடமிருந்து சேகரித்திருந்தன.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் சென்ற குழுவினர் இந்த நிதியினை பகிர்ந்தளித்துள்ளனர்.