இந்திய விமான சேவைகளில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடா?

0
240

சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு உத்தரவுகள் வெளியானதை தொடர்ந்து, இண்டிகோ மற்றும் கோ ஏர் ஆகிய இரண்டு உள்நாட்டு விமான சேவைகளும் திங்கட்கிழமை இயங்கவிருந்த சுமார் 60 விமானங்களை ரத்து செய்துள்ளன.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ப்ராட் மற்றும் விட்னி தயாரித்த PW1100 பிரிவின் கோளாறான எஞ்சின்களை கொண்ட ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களை இயக்கக்கூடாது என இந்தியாவின் விமான கண்காணிப்புத்துறை ஆணையிட்டுள்ளது.

இதனால் இன்டிகோவின் 8 விமானங்களும், கோ ஏர் சேவையின் 3 விமானங்களும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இதே எஞ்சின்களை கொண்ட 3 விமானங்களை இயக்க இன்டிகோ சேவை தடை செய்தது.

ஏன் இந்த தடை?

_100459819_gettyimages-520144922
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று ‘கோ ஏர்’ விமானம் ஒன்று லே (Leh) விலிருந்து புறப்பட்டு, எஞ்சின் கோளாறு காரணமாக திரும்பி தரையிறக்கப்பட்டது. 

சமீபத்தில் தொடர்ந்து சில விமானங்களில் எஞ்சின் கோளாறுகள் ஏற்பட்டது, இந்தியாவின் விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்த சர்ச்சையை எழுப்ப சிவில் விமான போக்குவரத்து துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று கோ ஏர் விமானம் ஒன்று லே(Leh)விலிருந்து புறப்பட்டு, எஞ்சின் கோளாறு காரணமாக திரும்பி தரையிரக்கப்பட்டது.

மார்ச் 5ஆம் தேதி, இன்டிகோ விமானம் எஞ்சின் பழுதடைந்ததால் புறப்பட்ட உடனேயே மும்பையில் தரையிரக்கப்பட்டது.

“எஞ்சின் தோல்வியடைவது என்பது இப்போதெல்லாம் அடிக்கடி நிகழ்கிறது” என்கிறார் முன்னாள் விமானப் பயிற்றுவிப்பாளர் மற்றும் விமான பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான கேப்டன் மோகன் ரங்கனாதன்.
_100461883_gettyimages-502229884
“நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விமானங்கள் செயல்பட, ஒரு ஆண்டுக்கு 25 எஞ்சின் கோளாறுகள் ஏற்படும் என்பது உலக சராசரி. அப்படியானால் மாதத்திற்கு 2. ஆனால் இந்தியாவில் ஏறக்குறைய வாரத்திற்கு ஒரு முறை எஞ்சின் கோளாறு ஏற்படுகிறது” என்று மோகன் தெரிவித்தார்.

விண்ணில் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு எஞ்சின் பழுதடைந்தால், விமானம் தொடர்ந்து பறக்கும், அதனை பாதுகாப்பான இடத்தில் தரையிரக்க முடியும். ஆனால் புறப்படும் போதே எஞ்சின் தோல்வி அடைவது என்பது ஆபத்தான ஒன்று.

“சமீபத்தில் நடந்த இதுமாதிரியான சம்பவத்தில், எஞ்சினின் உட்புற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது எஞ்சினினை சிதைத்து விடும். இந்தியாவில் விமான நிலையங்களை சுற்றி பல கட்டடங்கள் உள்ளன. விமானம் புறப்படும் போது, எஞ்சின் தோல்வி அடைந்தால், அது ஏற்படுத்தும் சேதத்தை சரி செய்வது மிகவும் கடினம்” என்று கேப்டன் மோகன் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய சிவில் விமான போக்குவரத்தின் மூத்த அதிகாரி, “இந்த எஞ்சின்கள் பல்வேறு பிரச்சனைகளை தருகின்றன. ஆகவே இவற்றை மாற்ற வேண்டும். விமான பாதுகாப்பு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.

பயணிகள் மீது இது என்ன விளைவை ஏற்படுத்தும்?

“இதனால் விமான டிக்கெட்டுகளின் விலை உயரக்கூடும். எனவே, நான் மும்பையில் உள்ள என் குடும்பத்தை சந்திக்க அடிக்கடி செல்ல முடியாது. என் போன்றவர்கள், வேறு வழியில்லாமல் அதிக விலை கொடுத்து டிக்கெட் பெற வேண்டியிருக்கும்” என்கிறார் டெல்லியில் பணிபுரிந்து வரும் அனூப்.

பயணிகளை வேறு விமானங்களுக்கு மாற்ற விமான சேவை நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

நடவடிக்கைகளில் தாமதமா?

PW1100 எஞ்சின்கள் கடந்த சில மாதங்களாக பல பிரச்சனைகளை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என சில வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“போதிய பாதுகாப்பு இல்லை என்று ஒரு சதவீதம் சந்தேகித்தால் கூட, விமானத்தை இயக்கக் கூடாது. பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் என்றால் ஏன் அதனை செய்ய வேண்டும்” என்கிறார் முன்னாள் விமானி மற்றும் விமான போக்குவரத்து நிபுணருமான மினூ வாடியா.

விமானத்துறையின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு

இந்தியாவின் விமானத் துறை வளர்ந்து வருகிறது. மேலும், குறைந்த செலவில் பல சேவைகள் இருப்பதால் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.

சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் கூற்று படி, உலகில் உள்நாட்டு விமான சேவை சந்தையில் அதிக வளர்ச்சி பெற்று வரும் நாடு இந்தியா.
_100461889_gettyimages-72159561 (1)
சிவில் விமான போக்குவரத்து துறையில் போதிய ஊழியர்கள் இல்லை என 2006ஆம் ஆண்டே சுட்டிக்காட்டப்பட்டது. தகுதியுள்ள விமான போக்குவரத்து கட்டுபாட்டு அதிகாரிகள், பொறியியலாளர்கள், பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஆகியோர் இன்னும் போதிய அளவில் இல்லை என்கிறார் பிபிசியிடம் பேசிய ரங்கனாதன்.

“சிவில் விமான போக்குவரத்து துறை மேலும் பல தொழில்நுட்ப ஊழியர்களுடன் சீரமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உலகில் பல இடங்களில் இருப்பது போல இந்தியாவிலும், தனி பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும்” என்கிறார் கேப்டன் வாடியா.

விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாதுகாப்பை மேற்பார்வையிட தகுதி வாய்ந்த பணியாளர்களை இந்தியா கொண்டுள்ளதா என வல்லுனர்கள் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY