பிரெக்ஸிட் ஒப்பந்தம்: பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய உடன்பாடு

0
129

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் “முறைப்படி வெளியேறுவதற்கான” ஒப்பந்தத்தின் மிக முக்கியமான விடயத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிட் உடன்பாடு பேச்சாளர்களான மைக்கேல் பார்னியர் மற்றும் டேவிட் டேவிஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்கான பிரிட்டனின் முயற்சியில் “இது தீர்க்கமான முடிவு” என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், வட அயர்லாந்து எல்லை போன்ற விவகாரங்கள் சார்ந்த பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

விரைவில் பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றுவோம்’ : ரஷ்யா பதிலடி
செளதிக்கு பிரிட்டன் போர் விமானங்கள் விற்பனை: ஒப்பந்தம் தயார்

இருதரப்பினருக்கும் இடையேயான நிரந்தர உறவை கருத்திற்கொண்டு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலம் 2019ஆம் ஆண்டு மார்ச் 29 இல் தொடங்கி 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் முடிவடையும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் காலத்தின்போது பிரிட்டனுக்கு வரும் மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள், ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு பெற்ற உரிமைகளை பெறுவதை உறுதியளிக்கும் விடயத்துக்கு பேச்சுவார்த்தையின்போது ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பார்னியர் தெரிவித்தார்.
_100479094_f4dc56f0-2aea-43dd-b066-7711a54ed14c

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் காலத்தின்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையும், வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதையும் இது அனுமதிக்கிறது.

இந்த வாரம் நடக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டில், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான காலம் சார்ந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு தெரீசா மேவின் சக தலைவர்கள் கையெழுத்திடுவார்கள் என்று இருதரப்பினரும் நம்புகின்றனர்.

“இரு தரப்பிலும் நல்லெண்ணம்” நிலவுவதை இந்த உடன்பாடு காண்பிப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY