காத்தான்குடி நகர சபையின் புதிய தவிசாளராக அஸ்பர் மற்றும் பிரதி தவிசாளராக ஜெஸீம் ஆகியோர் நியமிப்பு

0
557

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபையின் புதிய தவிசாளராக எஸ்.எச்.எம். அஸ்பர் மற்றும் பிரதி தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் சிபாரிசின் பேரில் சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரினால் இவர்கள் தவிசாளராகவும் பிரதி தவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வழிகாட்டலில் சிரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பத்து வட்டாரங்களிலும் வெற்றிபெற்று காத்தான்குடி நகர சபையின் ஆட்சியை கைப்பற்றினர்.

இதனடிப்படையில் காத்தான்குடி நகர சபைக்கான தவிசாளராக எஸ்.எச்.அஸ்பர் மற்றும் பிரதி தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Jaseem MUCஇவர்களிருவரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் பிரதி தவிசாளராகவும் இருந்துள்ளனர்.

இதில் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்பர் ஹிழுறியா வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெஸீம் ஹசனாத் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

புதிய தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சிரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எதிர்வரும் 25.03.2018 ஞாயிற்றுக்கிழமையன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

10 வட்டாரங்களையும் 18 உறுப்பினர்களையும் கொண்ட காத்தான்குடி நகர சபைக்காக சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் 10 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிலிருந்து நான்கு உறுப்பினர்களும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மூன்று உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY