கிண்ணியா, தம்பலகாமம் பிரதான வீதியில் விபத்து: இளைஞர் ஒருவர் வபாத்! இன்னாலில்லாஹ் …

0
412

(அப்துல்சலாம் யாசீம்)

கிண்ணியா, தம்பலகாமம் பிரதான வீதியில் மெடல் ஏற்றிச்சென்ற லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மூதூர் நெய்தல் நகரைச்சேர்ந்த 24 வயதுடைய உவைஸ் கர்னி என்பவர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் பயணித்த சக நண்பர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் ஜனாஸா கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளதுடன் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறிக்குள் சிக்குண்ட இழுத்துச்செல்லப்பட்டமையினால் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் வௌியாகியதுடன் விபத்துக்குள்ளான லொறி தீப்பற்றியுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

received_1191638584273131

LEAVE A REPLY