இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக பிரான்சஸில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி!

0
91

அன்மையில் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தின் மீது இடம்பெற்ற பேரினவாத தாக்குதலை கண்டித்தும் இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தக் கோரியும் மறுக்கப்பட்ட நீதியை நிலைநிறுத்தக் கோரியும் பாரிஸில் மாநகரில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சங்கங்கள். சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுடன் இனைந்தது முன்னெடுத்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நேற்று (17) சனிக்கிழமை இடம்பெற்றது.

கடும் குளிரிலும் பனிப்பொழிவுக்கும் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் நூற்றுக்கணக்கான சிங்கள தமிழ் முஸ்லீம் என அனைத்து இன இலங்கையர்களும் இதில் கலந்து இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது கண்டன குரலை தெரிவித்தனர்.

உலகின் முதன் முதல் மனித உரிமைகள் சாசனம் கைச்சாத்திடப்பட்ட இடமாகிய உலக ப்ரசித்திவாய்ந்த ஈபிள் கோபுரத்துக்கு முன்பாகவுள்ள ட்ரொக்கோட்ரா (Trocadéro) என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருந்து இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கக் கூறியும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூறியும், நீதியை நிலைநிறுத்தக்குறியும், அனைத்து இனவாத குளிக்களையும் தடைசெய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

IMG-20180317-WA0011 saz25 sqa14

LEAVE A REPLY