ஹொரவ்பொத்தானை குளத்திலிருந்து 63 வயதுடைய ஒருவரின் ஜனாஸா மீட்பு!

0
546

(அப்துல்சலாம் யாசீம்)

ஹொரவ்பொத்தானை குளத்திலிருந்து ஆனொருவரின் ஜனாஸா ஒன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஜனாஸா ஹொரவ்பொத்தானை, வீரச்சோலை பகுதியைச்சேர்ந்த முஸ்தபா லெத்தீப் (63 வயது) எனவும் தெரிய வருகின்றது.

இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பும் சப் வேலை செய்பவர் எனவும் கடந்த வௌ்ளிக்கிழமை ஹொரவ்பொத்தானை நகரில் இருந்ததாகவும் இன்றைய தினம் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாஸா தற்போது குளத்திற்குள் இருப்பதாகவும் நீதவான் பார்வையிட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY