கிரெடிட் கார்ட் மோசடி எதிரொலி – மொரிசியஸ் அதிபர் ராஜினாமா

0
148

ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மொரிசியஸ் நாட்டின் அதிபராக அமீனா குரிப்-பகிம் உள்ளார். இவர் கிரெடிட் கார்ட் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்த போது ஒரு அரசு சாரா தனியார் அமைப்பு வழங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 25 ஆயிரம் டாலர் அளவிற்கு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக ஒரு தனியார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

இதையடுத்து அரசு வேலைகளுக்காக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்தது. ஆனால் பதவி விலக முடியாது என அவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமீனா குரிப்-பகிம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் மார்ச் 23-ம் தேதி வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY