யுத்தம் இல்லாப் பூமி கேட்டேன்

0
310

(நிஷவ்ஸ்)

வதந்தி பரப்பா வட்ஸ் அப் கேட்டேன்.
பீதி கிளப்பா பேஷ்புக் கேட்டேன்.
சுதந்திரமாக கடை செய்யக் கேட்டேன்.
சுருட்டும் கொள்ளையர் சுடுபடக் கேட்டேன்.

காடையன் கூட்டம் கைதாகக் கேட்டேன்.
மூடன்கள் காவாலி முடியக் கேட்டேன்.
ஊமை இல்லாப் ‘பெரியவர்’ கேட்டேன்.
உள்ளால் குத்தா அரசாங்கம் கேட்டேன்.

ஆமி, அதிரடி கடமையைக் கேட்டேன்.
அவனே அடிப்பதை எதிர்க்கக் கேட்டேன்.
பூமியில் வாழ சுதந்திரம் கேட்டேன்.
புனித பள்ளிகள் காக்கக் கேட்டேன்.

வீரம் மிக்க உலமாக்கள் கேட்டேன்
விவேகம் மிக்க அரசியல் கேட்டேன்.
யாரும் பயப்பட ஒற்றுமை கேட்டேன்.
எதிர்த்து நிற்கச் சக்தி கேட்டேன்.

கலவரம் தூண்டாக் காவிகள் கேட்டேன்.
கைதான காடையன் இறுகக் கேட்டேன்.
பலகாலம் உள்ளே இருக்கக் கேட்டேன்.
பல மிக்க தலைமைகள் தோன்றக் கேட்டேன்.

அழுத்கம ஆசாமி ஒழியக் கேட்டேன்.
கின்தோட்டை முகத் திரை கிழியக் கேட்டேன்.
திகனயில் எரித்தவன் அழியக் கேட்டேன்.
தீவிரவாதம் நலியக் கேட்டேன்.

இலங்கையில் மறுபடி அமைதி கேட்டேன்
இல்லை என்றே பதிலைக் கேட்டேன்…!

LEAVE A REPLY