உலக சந்தோஷ அறிக்கையில் இலங்கை முன்னேற்றம்

0
94

உலக சந்தோஷ அறிக்கையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், இலங்கை மக்கள் கடந்த ஆண்டை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன.

இதில் பின்லாந்து முதலிடம் பெற்றது. நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு 120வது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை 116ஆவது இடத்திற்கு முன்னேறியது. இதில் இந்தியாவை விட இலங்கை முன்னேற்றகரமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக சந்தோஷ அறிக்கை பல விடயங்களின் அடிப்படையில் தொகுக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், சமூக உதவிகள், ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக சுதந்திரம், நன்கொடை வழங்கும் தன்மை, ஊழல் இல்லாத நிலை முதலான காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

LEAVE A REPLY