இந்திய மருத்துவர்கள் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா தொடர்பில் விசாரணை

0
192

இந்திய மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளியான செய்திகளை அடுத்து சுகாதார அமைச்சு இது பற்றி கவனம் செலுத்தியுள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் இலங்கையில் மருத்துவ சேவையில் ஈடுபடுவதற்கு இலங்கை மருத்துவ பேரவையின் அங்கீகாரத்தை பெற்றிருப்பது அவசியம்.

LEAVE A REPLY