உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் பின்லாந்து முதலிடம்

0
347

உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு என்ற கருத்துக்கணிப்பை ஐநா அமைப்பு ஒன்று நடத்தியது. ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. பின்லாந்து உலகிலேயே அதிக சந்தோஷமாக வாழும் மக்கள் கொண்ட நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தை அடுத்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை கொண்டே இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 156 நாடுகள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றிருந்த நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு கடந்த ஆண்டு 122வது இடம் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 11 இடங்கள் பின் தங்கியுள்ளது கூறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY