ஹிஜாப் என்பது ஒரு பெண்ணுக்கான சிற்நத பாதுகாப்பு வேலியாகும் – மௌலவியா பர்சானா இஸ்லாஹி

0
108

-விசேட நிருபர்-

ஹிஜாப் என்பது ஒரு பெண்ணுக்கான சிற்நத பாதுகாப்பு வேலியாகும் என மௌலவியா எம்..எச்.எஸ். பர்சானா இஸ்லாஹி தெரிவித்தார்.

(12.3.2018) திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மகளிர் தின ஒன்று கூடலில் சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி சுற்றாடல் பிரிவும், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவும் இணைந்து காத்தான்குடி பிரதேச செயல மாநட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த மகளிர் ஒன்று கூடலில் தொடர்ந்துரையாற்றிய அவர் ஹிஜாப் அணிவதை பெரும் தடையாக சிலர் நினைக்கின்றார்கள்.

ஒரு பெண் சமூக களத்தில் வெளியிறங்கி வரும் போது அவள் தன்னை பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த முதலாவது ஊடகமாக தனது அழகை மறைத்துக் கொள்வதாகும்.

மேற்கத்திய கலாசாரங்களை பின் பற்றக் கூடியவர்களும் மேற்கத்திய நாடுகளில் இருந்தும் இஸ்லாமிய ஹிஜாபுக்கெதிரான பெரும் பெரும் தடைகள் விதிக்கப்படுகின்றன.

ஹிஜாபை அணிகின்ற எந்த பெண்ணும் அதற்கெதிராக போராட வில்லை. ஆனால் அந்த ஹிஜாபை விரும்பாத சிலரே இன்று மேற்கத்திய நாடுகளில் ஹிஜாபுக்கெதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.

ஹிஜாப் என்பது ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பாகும். தன்னை முன்னேற்றக் கூடிய ஒரு ஆயுதம் என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரான்ஸ் நாட்டில் பர்தா போடுவதற்கு தடைச் சட்டம் வந்த போது அந்த நாட்டைச் சேர்ந்த பல பெண்கள் ஹிஜாப் ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பு எனக் கருதி ஹிஜாபுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்கள்.

இஸ்லாம் பெண்களை கட்டுப்படுத்துகின்றது என்ற ஒரு தவறான பார்வை சிலரிடம் இருக்கின்றது. ஆனால் உண்மை அதுவல்ல பெண்களுக்கு ஒரு வரையறையை விதித்துள்ள இஸ்லாம் அந்த வரையறைக்குள் நின்று வேலை செய்யும் போது அல்லது செயற்படும் போது அது எங்களுக்கு ஒரு பலத்த பாதுகாப்பாக அமையும் என்பதை நாங்கள் செயற்பாட்டு ரீதியாக கண்டு கொள்ளலாம்.

இஸ்லாத்தில் பெண்களின் நிலை குறித்து பெண்களுக்கான உரிமை குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமை குறித்து வேறு எதிலும் பேசப்பட வில்லை.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள வரையறை தடைகளல்ல அது பாதுகாப்பு வேலிகளாகும். அதற்குள் நாங்கள் நின்று வேலை செய்தால் நிச்சயமாக வெற்றியோடு சமூகத்தில் முன்னேறலாம் என்பது திடமான உண்மையாகும்.

அதை அனுபவித்த பெண்கள் பலரும் அதனை உனர்வு ரீதியாக கண்ட பெண்கள் பலரும் தமது கருத்துக்களை முன் வைத்து உள்ளார்கள்.

வலுவான ஒரு பெண்ணை உருவாக்குவதில் இஸ்லாம் பாரிய பங்கை செலுத்தி வருகின்றது.

இஸ்லாமிய பெண்கள் வீட்டினுள் அடைபட்டுக் கிடந்து அடிமைகளாக இருக்க வேண்டுமென இஸ்லாம் சொல்ல வில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமிய பெண்கள் பல உயர் பதவிகளில் இருந்துள்ளார்கள். பெண்கள் கல்வி கற்பதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் எந்த தடையும் கிடையாது. பெண்களாகிய நாங்கள் எம்மால் முழுமையாள பங்களிப்பை சமூகத்திற்கு செலுத்த வேண்டும்.

பெண்கள் ஒவ்வொருவரும் சிறந்த வீராங்கணைகளாக மாற வேண்டும்.

யுத்த களத்தில் மட்டும் பெண்கள் வீராங்கணைகளாக இருக்க வேண்டும் என்பதை விட சமூக செயற்பாட்டுக்களத்தில் பெண்கள் வீராங்கணைகளாக இருக்க வேண்டும்.

எமது வீடுகளில் ஒரு வீராங்கணையாக இருக்க வேண்டும். ஒரு சிறந்த தாயாக சிறந்த மனைவியாக வீராங்கணையாக இருப்பதுடன் கல்வி மட்டத்திலும் வீராங்கணையாக செயற்பட வேண்டும்.

சமூக மட்டத்தில் சமூக செயற்பாட்டுக்களத்திலும் ஒரு துடிப்புள்ள வீராங்கணையாக செயற்பட வேண்டும்.

எமக்கு வயது சென்று விட்டது நாம் எதனையும் செய்ய முடியாது என சில பெண்கள் நினைக்க கூடாது. வரலாற்றை பாத்தால் வயது முதிர்ந்த பெண்கள் செய்த சாதனைகள் பல இருக்கின்றன.

பெண்கள் ஒரு சிறப்பான படைப்பாகும். பெண்கள் தம்மால் முடியுமானதை சமூகத்திற்காக செய்ய வேண்டும்.

பெண்கள் இரண்டாம் பட்சமாக பெண்களை புறந்தள்ளி பெண் குழந்தை பிறந்தாலே அபச குணம் என்றெல்லாம் பேசப்பட்ட காலம் மலையேறி விட்டது.

இன்று பெண்கள் சகல துறைகளில் பிரகாசிக்கும் அளவுக்கு பெண்கள் திகழ்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY