ஓட்டமாவடி – மீராவோடையில் நகை மற்றும் பணம் கொள்ளை

0
102

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றிரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது குளியறையின் ஜன்னல் கதவினைக் கலட்டி உட்புகுந்த திருடர்கள் வீட்டின் கதவுகளை திருந்து வைத்துவிட்டு வீட்டினுல் இருந்த நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வாழைச்சேனை பொலிஸார் வருகை தந்து பார்வையிட்டதோடு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY