யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமம்

0
578

ஹஸ்பர் ஏ ஹலீம்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன, புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கோறலைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லைக்கிராமமான ரிதிதென்ன, புனானைப் பகுதியில் கட்டார் நாட்டின் கட்டார் ரெட் கிரசன்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்படி வீட்டுத் திட்டக் கிராமம் அமைக்கப்படவுள்ளது

.
இத்திட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட 60 வீடுகள், பொதுக் கட்டிடங்கள், பாடசாலை, நீர் தாங்கி, மைதானம் மற்றும் அடிப்படைக்கட்டிடங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் கோறலைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன், சிறப்பதிதியாக கட்டார் ரெட் கிரசன்ட் அமைப்பின் சர்வதேச நிவாரன அபிவிருத்தி அமைப்பின் பிரதானி ராஸித் ஸாத் அல் மஹாநதி கலந்து சிறப்பித்தார்.

IMG_5954IMG_5955IMG_5947IMG_5948IMG_5949IMG_5952IMG_5951

LEAVE A REPLY