அந்த பஸ் எங்கே? பஸ் சாரதி ஏன் கைது செய்யப்படவில்லை? ஏ.எல்.எம். மீராசாகிபு கேள்வி

0
264

(விஷேட நிருபர்)

தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல்களைப் போன்றே தற்போது முஸ்லிம் மக்களுகெதிரான தாக்குதல்களும் இடபெற்றிருக்கின்றன. இவ்வாறான சம்பவம் இனிமேலும் தொடராதிருக்க வேண்டுமென என சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் சேவை நிறுவகத்தின் தலைவரும் கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான ஏ.எல்.எம். மீராசாகிபு தெரிவித்தார்.

இவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

‘இந்த நாட்டில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களைப் பார்க்கின்றபொழுது 1983ஆம் ஆண்டு காலத்தில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்ற மிகமோசமான தாக்குதல்களைப் போன்றே தற்போது முஸ்லிம் மக்களுகெதிரான தாக்குதல்களும் இடபெற்றிருக்கின்றன.

ஏவி விடப்பட்ட காடையர்கள் மூலமாக எமது மக்களின் பொருளாதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன சிறுபான்மைச் சமூகத்தினரை ஒடுக்கி அதில் ஒரு பிரிவினராக வாழும் முஸ்லிம் மக்களை ஏனைய சகோதர சமூக த்தவர்களிடமிருந்து அன்னியப்படுத்தும் செயலாகவே கண்டி மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இலங்கைத் திருநாடான இந்தப் புண்ணிய பூமியில் இவ்வாறானதொரு சம்பவம் இனிமேலும் தொடராதிருக்க வேண்டுமென். நாட்டில் வாழும் சகல இன மக்களும் நல்லிணக்கத்தோடு பயணிக்கவேண்டும்.

பல தசாப்த காலமாக முஸ்லிம் சமூகத்தினர் சிங்கள் மக்களுடன் இன நல்லுறவுடனும், வர்த்தக உடன்பாட்டுடனும், கூடி வாழ்ந்து வருபவர்கள். இச் சுமூக நிலையினை சீர்குலைப்பதற்காக ஏவிவிடப்பட்ட காடையர்கள் கும்பல்களினால் அரங்கேற்றப்பட்ட ஒரு மிலேசத்தனமான சம்பவமே கண்டியில் இடம்பெற்ற சம்பவமாகும்.

நம்பகத் தன்மையற்ற கொத்துரொட்டி பிரட்சனையை பூதாகரமாக்கி மக்களிடையே மனக்கிலேசத்தினை விதைப்பதே சிலருடைய நோக்கமாகு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் எமது மக்களை பாதுகாப்பதில் அதி சிரத்தையுடன் நடந்துகொள்வது காலத்தின் தேவையாகும். பௌத்த மதத்தில் கூறப்பட்ட அதி உன்னத காருண்ணிய கோட்பாட்டினை மதிப்பவர்கள் ஒருபோதும் இவ்வாறான பிற்போக்கு சிந்தனையுடன் நடக்கமாட்டார்கள்.

அம்பாறையில் இடம்பெற்ற சம்பவங்களின்போது பஸ்களில் ஏறிவந்த வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல்கள் நடாத்தியதாக கூறப்படுகின்ற அதே சமயம், அந்த பஸ் எங்கே? பஸ் சாரதி ஏன் கைது செய்யப்படவில்லை? தாக்குதல் நடாத்தியவர்கள் மாயமாக மறைந்ததன் நோக்கமென்ன? இவ்வாறான கேள்விகளும் எமக்குண்டு. இணையத் தளங்கள், முக நுல்கள் என்பவற்றை முடக்கி விசித்திரமாக சட்டதிட்டங்களை கையாள்பவர்கள்.

இதனை இயங்கவைத்து அதனூடாக யார் இவ்வாறானதொரு சம்பவங்களை பரப்புகிறார்கள் என்பதனைக் கண்டுபிடிக்க ஏன் முடியாது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந் நாட்டில் தொடர்ந்தும் அநீதி இளைக்கப்ப்படுமாயின் மேலுமொரு அரசியல் மாற்றத்திற்கான அங்கீகாரத்தினை தீர்மானிக்கும் சக்தியாக எமது மக்கள் விளங்குவார்கள்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY