முஸ்லீங்கள் மீதான வன்முறை மனோபாவம் மாற்றப்பட வேண்டும்

0
290

அஸீம் கிலாப்தீன்

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவ நேரத்திலும் அதன் பின்னரும் அரசியல் தலைமைகள் சமூக, சிவில் அமைப்புகள், தலைவர்கள் எங்கே இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்ற கவலையொன்று இலங்கையில் உருவாகியிருக்கிறது.

இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த முதலாவது இனக்கலவரம், 1915 ஆம் ஆண்டின் கண்டிக் கலவரம் தான். ஆனால், இப்போது 2018 மார்ச்சில் ஏற்பட்ட கலவரத்தோடு இரண்டாகிக் ‘கண்டிக் கலவரங்கள்’ என்று வரலாறு பதிவு செய்கிறது.

சிவில் சமூகம், அரசாங்கம், அரசியல்வாதிகள், ஊடகங்கள், மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் யாவும் இணைந்தவையாக ஒன்று சேர்ந்து இயங்கும் பொழுதே, நாட்டில் நன்மை நடக்கும்

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், நாட்டில் எல்லாமே முடிந்து விட்டது நினைத்து கொள்ள முடியவில்லை. அடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள், பேருவளைக் கலவரம் மிகவும் கொடுரமானதாகவே கொள்ளப்பட்டது. ஆனால், அது ஒரு வகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அமைதி காக்கப்பட்டது.

பின்னர், கொழும்பில் தஞ்சம் அடைந்த றோகிஞ்சா அகதிகள் பிரச்சினை எழுந்து, அமைதி பெற்றது. அவ்வேளைகளில், ஒருசில சிவில் அமைப்புகள் ஒன்று திரண்டு அமைதிக்காகப் பாடுபட்டன.

இப்போது, அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் உணவருந்த வந்த பெரும்பான்மைச் சிங்கள இளைஞர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை, தற்போதும் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ‘பேஸ் புக்’ என்கிற முகநூலே வாழ்க்கை என்றிருந்தவர்களுக்குப் பேரிடியைக் கொடுத்திருக்கிறது.

அதேபோலத்தான் வைபர்; பக்கத்திலிருப்பவரைக்கூட கணக்கிலெடுக்காது வைபருடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், அடுத்தவருடனும் பேசத்தான் வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை, தானாக ஏற்பட்டதா? இல்லாவிட்டால் சதிசெய்யபட்ட சதியா என்ற சந்தேகங்கள் பலவற்றைத் உருவாகிறது.
முகநூல் மற்றும் வைபர் போன்ற சமூக வலைத்தளங்கள், ஒரு பிரதேசத்துக்குள் தடைசெய்யப்படுவதால் பிரயோசனமில்லை.

நாடு முழுவதும் முகநூல் மற்றும் வைபர் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி கேட்கப்பட்டாலும், உண்மையைச் சொன்னால், உலகத்துடனான தமது தொடர்பை அறுத்து விட்டிருப்பதாகவே நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு ஐ.நாவில், இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பொறுப்புக் கூறல் விடயம், வெறும் கண்துடைப்பாக அமையக் கூடாது என்ற வலியுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், பற்றவைக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான குழப்பம், இப்போது தணிந்து விட்டது என்று வெளிப்படையாகச் சொன்னாலும், அது முடிந்துவிடவில்லை. ஆனால், சமூக ஊடகங்கள் இலங்கையில் சாதாரணமாகப் பாவனைக்கு வராத காலத்தில், ஊடகங்களுக்கான தணிக்கை, வலைத்தளங்களுக்கான தடைகள் கட்டுப்பாடுகளோடு ஒப்பிட்டு பக்கும் போது சிறிய செயற்பாடு என்றாலும், இன்றைய கால கட்டத்தில் பெரிய தாக்கத்தையே உருவாகிறது

பிரச்சினைகள் ஏற்படுகின்ற வேளைகளில், அவற்றை ஊதிப் பெரிதாக்குவதற்காக அமைப்புகளும் நிறுவனங்களும் தனி நபர்களும் தோன்றிவிடுகின்றனர். ஆனால், பிரச்சினைகளைச் சீர்செய்வதற்கும் ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொள்வதற்கும் யாரும் இல்லாததொரு நிலையே இப்போதைய காலத்தில் நாட்டில் இருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களை நன்றாகவே அந்த பகுதி ( பிரச்சினை ஏற்பட்ட பகுதி ) மக்கள் நன்றாகவே புரிந்து இருப்பார்கள் அதிகாரம் என்ற ஒன்று இருந்தததாலேயே பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் அரசியல் அதிகாரத்தினால் தான் அந்த பகுதிகளுக்கு சென்று கலவரங்களை கட்டுப்பாடடுக்குள் கொண்டுவரப்படுள்ளது சிவில் அமைப்புக்கள் வெளியில் இருந்து குரல் கொடுத்ததே தவிர நேரடியாக கலத்துக்கு செல்ல முடியாத நிலை உருவானது

எமது அரசியல் தலைமைகள் இந்த ஆட்சி அதிகாரங்களை விட்டு விலகி இருந்திருந்தால் எமது சமுகம் இன்னும் பாதிக்கப்பட்டு இருந்திருக்கும் அதிகாரத்தை, பதவியை தூக்கி எறிந்திருந்தால் ஹக்கீமோ, ரிஷாத்தோ, ஹலீமோ, பைசர் முஸ்தபாவோ, வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டிருக்கும் இந்த பதவியினால் தான் இந்த அமைச்சரகளுக்கு ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியில் எமது தலைமைகள் பாத்திக்கப்ட்ட மக்களுடன் களத்த்தில் நின்றனர் என்பதை யாராலும் மறக்க முடியாது

LEAVE A REPLY