கிண்ணியா குட்டிக்கராச்சி பால திருத்த வேலை காரணமாக போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்தவும்

0
76

ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்து அதனை தற்போது திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் மாற்று வழிகளை போக்குவரத்துக்காக பயன்படுத்துமாறு உரிய அதிகாரிகள் போக்குவரத்தில் இவ்வீதியூடாக ஈடுபடுவோர்களை கேட்டுக் கொள்கின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்து காணப்படுவதனால் தற்போது இவ் வீதியூடாக மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி,முச்சக்கர வண்டி போன்ற சிறியரக வாகனங்களை தவிர ஏனைய கனரக வாகனங்கள் பஸ் வண்டிகள் என்பன பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்துப் பணியில் இவ் வீதி வழியாக பயணம் செய்வோர்களுக்கு இவ் அறிவித்தல் விடுக்கப் படுகிறது.

இப் பிரதான வீதி பாலத்தின் வழியாக திருகோணமலை,மூதூர்,கிண்ணியா போன்ற கொழும்பு பஸ்கள் பிரயாணம் செய்வதும் வழக்கமாகக் காணப்படுகிறது எனவே பால திருத்த வேலை முடியும் வரை இவ் வழியை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.டிப்பர் வாகன நெறிசலினால் நேற்று(12) தம்பலகாமப் பகுதியில் (20,21வயது)இளைஞர்கள் இரூவர் பலியாக்கப்பட்டுள்ளனர்

இக் குட்டிக்கராச்சி பாலத்தின் வழியாக நாளாந்தம் இரவிலும் பகலிலும் கனிசமான கனரக வாகனங்கள்(மண் டிப்பர்கள்) போக்குவரத்தில் ஈடுபட்டதனாலையே இப் பாலம் உடைந்துள்ளதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

20180311_173008 20180311_173011 20180311_173023

LEAVE A REPLY