வீடியோ சென்டர் உரிமையாளர் மின்சாரம் தாக்கி மரணம்

0
210

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மேம்காமம் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று திங்கள்கிழமை உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பூப்புனித நீராட்டு விழாவிற்காக சென்ற வீடியோ சென்டர் உரிமையாளரான இவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர், கிளிவெட்டி, பாரதிபுரம் பகுதியைச்சேர்ந்த என்.சுதாகரன் (42வயது) எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY