பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கு காத்தான்குடி சம்மேளனம் நன்றி தெரிவிப்பு

0
891

abdur-rahman-bcas2018.03.10
அல்ஹாஜ். எம்.எம். அப்துர்ரஹ்மான் (Eng.)
தவிசாளர்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி,
காத்தான்குடி.

அன்புடையீர்,
السلام عليكم ورحمة الله وبركاته

நன்றி பாராட்டுகிறோம்

நமது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இனவாத தாக்குதல்கள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகின்ற காணிப்பிர்சசினைகள் சம்பந்தமாகவும் தாங்கள் ஜெனீவா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்து நமது பிரச்சினைகளை அவர்களிடம் முன்வைத்தமைக்காக கிழக்குமாகாண முஸ்லிம்கள் சார்பாக தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நம்நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறுகின்ற பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்துவதில் தங்களைப் போன்ற புத்திஜீவிகளின் பங்கு முக்கியமானதென நாம் கருதுகின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தொடர்ந்தும் இச்சமூகத்திற்காக குரல்கொடுக்கக் கூடிய ஆற்றலையும் வல்லமையையும் தங்களுக்குத் தரவேண்டுமென நாம் பிரார்த்திக்கின்றோம்.

جزاك الله خيرا

அல்ஹாஜ். AMM. தௌபீக் BSc Eng.
தலைவர்

அஷ்ஷெய்க். ABM. சபீல் (நளீமி) BA
செயலாளர்

LEAVE A REPLY