ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள்

0
149

ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், போலிச் செய்திகளை பாட்டுக்கள் (bots) எனப்படும் மென்பொருள்களைவிட மனிதர்களே அதிக எண்ணிக்கையில் ரீ-ட்வீட் செய்தது தெரியவந்துள்ளது.

போலிச் செய்திகள் படிப்பதற்கு ஒருவித நூதனமான உணர்வை அளிப்பதால் அவை படிப்பதற்கும், பகிர்வதற்கும் தூண்டுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் நீக்கம் – காரணம் என்ன?
போர்க்களத்தில் மனிதர்களுக்கு பதில் இனி இயந்திரங்கள் போரிடுமா?
இதில் அரசியல் சார்ந்த போலிச் செய்திகளே முதன்மையான இடத்தை பெற்றிருக்கின்றன.

அடுத்ததாக புனையபட்ட கதைகள், தொழில், தீவிரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கை பேரிடர்கள் பற்றிய போலிச் செய்திகள் பரவலாக வலம் வருகின்றன. இந்த ஆய்விற்குரிய தரவுகளை ட்விட்டர் நிறுவனம் அளித்திருந்தது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அந்நிறுவனம், தாங்கள் பொது உரையாடலுக்கு அளிக்கும் பங்களிப்பை “பரிசோதனை செய்யும்” முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டுவருவதாக தெரிவித்தது.

“போலிச் செய்திகள் பெரும்பாலும் புதுமையானதாக இருப்பதால், அவற்றை பகிர்வதற்கு மக்கள் விரும்புகின்றனர்” என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான பேராசிரியர் சினன் அரல் கூறுகிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பாஸ்டன் நகர மாரத்தான் போட்டியின்போது ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கு பிறகு இந்த ஆராய்ச்சியை பேராசிரியர்கள் அரல், சோரோஸ் வாசோகி மற்றும் இணை பேராசிரியரான டெப் ராய் ஆகியோர் தொடங்கினர்.

“ட்விட்டரை எங்களது முதன்மையான தகவல் ஆதாரமாக கொண்டு இந்த ஆராய்ச்சியை தொடங்கினோம்” என்று பேராசிரியர் வாசோகி கூறுகிறார்.

“நான் சமூக வலைதளங்களில் படித்து வரும் பெரும்பாலான விடயங்கள் புரளிகள் மற்றும் போலிச் செய்திகள் என்பதை அறிந்தேன்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஸ்நோப்ஸ் மற்றும் அர்பன்லெஜெண்ட் உள்ளிட்ட ஆறு உண்மை கண்டறியும் நிறுவனங்களின் உதவியோடு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY