தேனியில் காட்டுத்தீ: 40க்கும் மேற்பட்டவர்கள் தவிப்பு

0
218

தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலைஏறும்(trekking) பயிற்சிக்காக காட்டுக்குள் வந்தவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை அடுத்து, காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவர்களை வெளியே கொண்டுவர, உடனடியாக மீட்புபணியில் செயல்படவேண்டும் என்று தென்மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
_100367938_nirmalasitaraman

மீட்புப் பணியில் போடி பகுதியில் உள்ள பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிபிசி தமிழிடம் பேசிய தேனி மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி தென்னரசு, இவர்கள் மலைஏறும் பயிற்சிக்காக வந்தவர்கள் என்றும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மலைஏறும் நிறுவனத்தின் மூலம் தேனி வனப்பகுதிக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 12 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ”மலைப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வண்டியை செலுத்த முடியாதால், மருத்துவக்குழுவினர் நடந்துசென்று பாதிக்கப்பட்டவர்களை கொண்டுவந்தனர். தற்போது எட்டு நபர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குரங்கணி மலை மீது மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளனர். இரவு நேரம் என்பதால், அங்குள்ளவர்களுக்கு உடனடி முதல்உதவி கொடுக்கப்பட்டு, பின்னர் கீழே கொண்டுவரப்படுகின்றனர்,” என தெரிவித்தார்.

LEAVE A REPLY