காணாமல் போயிருந்த வர்த்தகர் முபாரக் ஜனாஸாவாக மீட்கப்பட்டார்! இன்னாலில்லாஹ் …

0
1382

புதிய காத்தான்குடி-2, மனேஜர் லேனில் வசிக்கும் ஏ.எல்.எம். முபாறக் என்பவரை நேற்று இரவு முதல் காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்த நிலையின் இன்று மாலை அவர் ஜனாஸாவாக மீட்கப்பட்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

பாதனி தொழிற்சாலையின் உரிமையாளரான இவர் நேற்று (10) சனிக்கிழமை இரவிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை கல்லடி வாவியில் இருந்து ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக உறவினர் ஒருவர் எமது ஸாஜில் நியூஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

ஜனாஸா தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY