பல மாதங்களுக்குப் பின்னர் ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

0
142

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை (12) திங்கட்கிழமை இடம்பெற ஏற்பாடாகியுள்ளதென பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவலிங்கம் அறிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகம் நீண்ட காலமாக பிரதேச செயலாளரின்றி பதில் பிரதேச செயலாளரினால் நிருவகிக்கப்பட்டு வந்த நிலையில் நீண்டகாலமாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களும் இடம்பெற்றிருக்கிவில்லை.

திங்கட்கிழமை இடம்பெறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ள வெள்ளக்குட்டி யூசுப் தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலகத்தில் இடம்பெறும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பாண்டில் மக்கள் பிரதிநிகளின் நிதி ஒதுக்கீடுகள், மத்திய, மாகாண அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களின் அமுலாக்கத்திற்காக ஒதுக்கப்படுகின்ற நிதியொதுக்கீடுகள் மற்றும் இன்னபிற பிரதேச அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், முன்னேற்றங்கள் பின்னடைவுகள் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் ஆராயப்படுவது வழமையாகும்.

LEAVE A REPLY