கண்டி வன்முறைகளினால் 17 பள்ளிவாயல்கள், 141 வீடுகள் சேதம்: முஸ்லிம் கவுன்சில் தெரிவிப்பு

0
176

(விஷேட நிருபர்)

கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற வன்முறைகளினால் 17 பள்ளிவாயல்கள் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் உப தலைவர் ஹில்மி அகமட் கையொப்பமிட்டு இது தொடர்பான அறிக்கையொன்றை பொலீஸ் ஊடகப் பேச்சாளர் றுவான் குணசேகரவுக்கு அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் வனமுறைச் சம்பவங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

141 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 62 வீடுகள் முழுமையாகவும் 79 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

17 பள்ளிவாயல்கள் சேதமடைந்துள்ளதுடன் 113 வர்த்தக நிலையங்கள் வியாபார ஸ்தாபனங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 91 வர்த்தக நிலையங்கள் முழுமையாகவும் 22 வர்த்தக நிலையங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

60 வாகனங்கள் எரிக்கப்பட்டு உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 300 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.3.2018 அன்று இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

IMG-20180310-WA0078

LEAVE A REPLY