அவசர கால நிலைமையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0
198

(விஷேட நிருபர்)

அவசர கால நிலைமையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு அவசகார நிலைமையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனாவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் கூறினார்.

வன்முறைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையாக கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடிகின்ற வரை இந்த அவசர கால சட்டத்தினை நீடிக்க வேண்டாம் எனவும் நாம் கோரியிருக்கின்றோம்.

தற்போதுள்ள அவசரகால சட்டத்தினை ஜனாதிபதி அவர்கள் அலசி ஆராய்ந்து தேவை ஏற்படின் நீடிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக எங்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறைகள் வேறு பிரதேசங்களிலும் ஏற்படாமல் இருப்பதற்கும் அல்லது அவ்வாறு ஏற்படுகின்ற போது முஸ்லிம்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்டாமலிருப்பதற்கும் சில நடவடிக்கைகளை எடுக்குமாறு சில ஆலோசனைகளை நான் ஜனாதிபதிக்கும் பிரதமந்திரிக்கும் எழுத்து மூலமாக கோரியுள்ளேன்.

அந்த ஆலோசனைகளை எழுத்து மூலமாக ஜனாதிபதிக்கு கையளித்துள்ளேன். பிரதமருக்கும் அனுப்பி வைத்துள்ளேன்.

இது தொடர்பபில் தொடர்ச்சியாக சகல தரப்பினரோடும் நான் வைத்துள்ள ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடவுள்ளேன் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY