ஓட்டமாவடி / தியாவட்டவான் பகுதியில் சமூக நல்லிணக்கம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

0
119

.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)
இலங்கையில் பல பகுதிகளிலும் மிக வேகமாக பரவிவரும் இனவாத செயல்கள் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் இருப்பதற்காகவும் இலங்கை மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் என்றென்றும் தங்களுடைய வாழ்க்கையை நடாத்தி செல்வற்கு வழிவகுப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் கல்குடா தொகுதியில் மூவினத்தவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்காகவும் தீய சக்திகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்குமான விசேட கலந்துரையாடலொன்று ஓட்டமாவடி – தியாவட்டவான் பகுதியில் அமைந்துள்ள விகாரையில் நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள சபையின் உறுப்பினர் ஏ.ஜீ. அசீசுல் ரஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விசேட கலந்துரையாடலில் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, இராணுவ அதிகாரிகளான கேணல் ரொஹான் ஜெயமனு, மேஜர் சமந்த ஆராய்ச்சி ஆகியோர்களோடு மதத் தலைவர்கள், பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல், கோவில், தேவாலய நிருவாகிகள் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞசர் கழககங்களின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு தங்களுடைய ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.

இப் பிரதேசத்தில் எதிர்காலத்தில் சமூக விரோதச் செயல்கள் மற்றும் ஒரு சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறாதவாறும் அந்த செயற்பாடுகளை தடுப்பதக்குமான எல்லாவகையான நடவடிக்கைகளையும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்படுத்துவோம் என்று வருகை தந்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளினால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20180309-WA0049 IMG-20180309-WA0051

LEAVE A REPLY