இரண்டு வெவ்வேறு இடங்களில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

0
116

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹமாயபுர மற்றும் சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நாச்சிக்குடா பகுதிகளில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேரை நேற்று (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மட்கோ,மஹமாயபுர பகுதியில் மூன்று பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் சேர்ந்து குழியொன்றினை தோண்டிக்கொண்டிருந்த வேளை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 எனும் இலக்கத்துக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும் தலைமைக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எ.எம்.அப்துல் முஹீத் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நாச்சிக்குடா பகுதியில் வீடொன்றினுள் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் 52 வயது மற்றும் 21 வயதுடையவர்களை கைது செய்துள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்களையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது மேலதிக தரவுகளை பெற்றுக்கொள்ளும் வரை 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY