ஆரையம்பதி சந்தேக நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

0
996

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் இளைஞர் ஒருவர் இன்று (09) வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இவரது சடலம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் புதன்கிழமையன்று ஆரையம்பதி காங்கேயனோடை எல்லைப்பகுதியில் இரண்டு வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவரது சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இவர் பயன் படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் அடையாளம் காட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட குறித்த நபரின் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இருந்து புதன்கிழமை காலை குண்டுகள், வெடி மருந்துகள், பெற்றோல், வயர்கள், பெற்றரி போன்றவைகள் மீட்கப்பட்டதுடன் இந்த வீடுகளின் முன்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். சிரீலங்கா என எழுதப்பட்ட பதாதைகளும் தொங்க விடப்பட்டிருந்தன.

குறித்த சசந்தேக நபருக்கும் அவரு மனைவிக்குமிடையில் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. அவருடைய குடும்ப தகராறு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில் தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தை அச்சுறுத்துவதற்காக இந்த வெடி மருந்துகள் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட குண்டுகளை வைத்ததுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். ஏன எழுதப்பட்ட பதாதைகளையும் தொங்க விட்டு விட்டு இவர் தலைமைறைவாகியிருந்தமை பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது.

மேற்படி சந்தேக நபர் தலைமை மறைவாகியிருந்த நிலையில் பொலிசார் அவரை தேடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 20180309_151240

LEAVE A REPLY