மனைவியை அச்சுறுத்த ஐ.எஸ் நாடகம்: பொலிஸ் விசாரணையில் அம்பலம்: கனவன் அன்புராஜ் தலைமறைவு: ஆரையம்பதி காங்கேயனோடை எல்லையில் சம்பவம்

0
874

(விஷேட நிருபர்)

ஆரையம்பதி-காங்கேயனோடை எல்லை வீதியில் இரண்டு குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து வீட்டுரிமையாளரை காத்தான்குடி பொலிசார் தேடி வருவதாக காததான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

புதன்கிழமை காலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி காங்கேயனோடை எல்லையிலுள்ள இரண்டு வீடுகளில் இருந்து உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரண்டு பெற்Nhல் குண்டுகள் மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரான அருள்ராஜ் அன்புராஜ் என்பவரை பொலிசார் தேடிவருவதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேக நபர் தலைமறiவாகி விட்டதாகவும் அவரை பொலிசார் தேடி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மேற்படி சந்தேக நபருக்கும் அவரது மனைவிக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் மனைவியை அச்சுறுத்துவதற்காக இந்த பெற்றோல் குண்டுகள் வெடி மருந்துகளை சந்தேக நபர் வைத்திருந்ததாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

புதன்கிழமை காலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி காங்கேயனோடை எல்லையிலுள்ள இரண்டு வீடுகளில் இருந்து இரண்டு பெற்றோல் குண்டுகள் மற்றும் 250 கிறாம் வெடி மருந்துகள் பெற்றோல் மற்றும் பெற்றரி வயர் என்பன மீட்கப்பட்டன.

இந்த குண்டுகள் மீட்கப்பட்ட வீடுகளுக்கு முன்னாள் ஐ.எஸ்.ஐ.எஸ் எனவும் எழுதப்பட்ட பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

இங்கு விரைந்த பொலிசார் விசாரணகளை மேற்கொண்டதுடன் குறித்த குண்டுகள் வெடி பொருட்களை மீட்டு விஷேட அதிரடிப்படையினர் செயலிழக்க செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் காத்தான்குடி பொலிசார் ச்தேநகத்தின் பேரில் வீட்டு உரிமையாளராக அருள்ராஜ் அன்புராஜ் என்பவரை தேடி வருவதாக குறிப்பிட்டனர்.

தொடர்ந்து இது குறித்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY