ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சையை ஒத்திவைக்க ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

0
194

ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அவசர கால நிலையைக் கருத்திற் கொண்டு பரீட்சையை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் ஏற்பட்டுள்ள பிரச்சினை சூழலில் பரீட்சை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பரீட்சைகள் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனடிப்படையில் குறித்த பரீட்சையினை பிற்போடுவது சம்பந்தமாக ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை மார்ச் 10ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சையில் தோற்றுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் வர வேண்டியுள்ளது. எனினும் நாட்டின் மத்திய மாகாணம் உள்ளிட்ட சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையால் பரீட்சார்த்திகள் போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பரீட்சைகள் ஆணையாளருடன் தொலைபேசியில் பேசியுள்ளதுடன், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் கோரிக்கையொன்றினையும் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY