கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் நியமனம்

0
170

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் அம்பாறை மேல் நீதிமன்றத்தின் நீதவானும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதவானாக கடமையாற்றிய நீதவான் சந்திர ஜெயதிலக்க இன்று (07) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னைநாள் உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச்செய்து புதிய நியமனங்களை வழங்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது தலைவர் பதவி மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் உறுப்பினராக கிழக்கு பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பீ.டபிள்யூ.டி.சி.ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

DSC_0409 DSC_0413

LEAVE A REPLY