மட்டக்களப்பில் ஹோட்டல் ஒன்றின் மீது கல்வீச்சு; கண்ணாடிகள் சேதம்

0
741

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பில் ஹோட்டல் ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை (06) இரவு கல் வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு எல்லை வீதியிலுள்ள இந்த ஹோட்டலை அதன் உரிமையாளர் இரவு 10.30 மணியளவில் மூடி விட்டு சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த கல் வீச்சு தாக்குதலினால் ஹோட்டலின் முன் பகுதி கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹோட்டல் உரிமையாளர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிசார் விசாரணைகளையும் நடாத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சி.சி.ரி.வி. ஒளிப்பதிவு கமறாவில் பதிவாகியுள்ளது. அதனையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார்.

DSC06882 DSC06884 DSC06883

LEAVE A REPLY