ஆரையம்பதி/காங்கேயனோடையில் இரண்டு குண்டுகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். என எழுதப்பட்ட பதாதைகளும் மீட்பு

0
534

(விஷேட நிருபர்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவு ஆரையம்பதி/காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் இரண்டு குண்டுகள் இன்று (07) புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காங்கேயனோடை பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளிலேயே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள் காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது வீட்டு முன்பாக குண்டுகள் இருப்பதை கண்டுள்ளனர்.

இதையடுத்து பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தளத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன் போது அக்குண்டை பொருத்தியிருந்த பெற்றி பெற்றோல் குண்டு மற்றும் வயர் என்பவைகளும் மீட்கப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

இந்த குண்டுகள் காணப்பட்ட வீட்டுக்கு முன்னாள் ஐ.எஸ்.ஐ.எஸ். சிரீலங்கா என எழுதப்பட்ட பதாதையும் தொங்கவிடப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் ஒரு குண்டு பெற்றியுடன் பொருத்தப்பட்டு அதன் வயர்களும் பொருத்தப்பட்டிருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

இது உள்ளுரில் தயாரிக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டதுடன் பொலிஸ் குற்ற தடவியல் அதிகாரிகளும் ஸ்தளத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகரும் உரிய இடத்திற்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர்.

DSC06863 DSC06865 DSC06868 DSC06870 DSC06874

LEAVE A REPLY