ஆரையம்பதியில் சட்ட விரோத மாசி பொதி செய்யும் தொழிற்சாலை முற்றுகை மனித பாவணைக்குதவாத 240 கிலோ மாசி மற்றும் காலாவதியான சுவையூட்டிககள் மீட்பு

0
284

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் மனித பாவணைக்குதவாத 184 கிலோ மாசி மற்றும் காலாவதியான சுவையூட்டிகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (06) செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

ஆரையம்பதி வடக்கு எல்லையிலுள்ள வீடொன்றிலேயே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் டெங்கு பரிசோதனைக்காக குறித்த வீட்டுக்கு சென்று அங்கு டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த வீட்டில் சட்ட விரோதமாக மாசி பொதி செய்யும் நடடிவக்கை பொதுச் சுகாதார பரிசோதர்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வீட்டிலிருந்த மாசி மற்றும் இதற்கு போடும் சுவையூட்டி என்பவற்றை பரிசோதானை செய்த போது குறித்த சுவையூட்டி காலாவதியான சுவையூட்டி என தெரிய வந்தது. இதன் போது 20 களன் சுவையூட்டிகளை கைப்பற்றியதுடன் இங்கு பொதி செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 184 கிலோ அடங்கிய மாசி மூட்டைகளையும் கைப்பற்றினர்.

இந்த மாசியினை மனித பாவணைக்குகந்ததா என்பதை கண்டறிய கொழும்பபிலுள்ள உணவு பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.அதுவரை குறித்த மாசி மூட்டைகள் சுகாதார அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்.

அத்தோடு இதன் உரிமையாளருக்கு எதிராக காலாவதியான சுவையூட்டி வைத்திருந்தமைக்காக நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டனர்.

அனுமதியின்றி மாசி இங்கு பொதி செய்யப்பட்டு கொழும்பு லேபள்கள் இடப்பட்டு அது விற்பணைக்கு அனுப்பப்பட்டது இதன் போது தெரிய வந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் உரிமையாளருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை இதன் போது வழங்கியதுடன் இங்கு காணப்பட்ட ஊழியர்களிடம் அவர்களின் உடல் நிலை சுகாதாரம் குறித்த சான்றிதழ்கள் இருக்க வில்லை எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.

DSC06853 DSC06856 DSC06860

LEAVE A REPLY