மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

0
1013

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை தாயொருவர் பிரசவித்துள்ளதார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா மண்முனை வீதி தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் காயத்திரி என்ற (வயது 26) தலைபிரசவத்தில் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (05) திங்கட்கிழமை இரவு 10.00 மணியளவில் குறித்த தாயிக்கு மேற்கொண்ட அறுவைசிகிச்சை மூலம் இந்த மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மூன்று குழந்தைகளில் முதல் பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் இடையுடனும், இரண்டாவது ஆண் குழந்தை 1 கிலோ 800 கிராம் இடையுடனும், மூன்றாவது ஆண் குழந்தை 1 கிலோ 540 கிராம் இடையை கொண்ட மூன்று குழந்தைகளும் அறுவைசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த தாயும் மூன்று குழந்தைகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 7வது விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக விடுதி வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

IMG_8472 IMG_8484

LEAVE A REPLY