பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்: 18 பேர் பலியானதாக தகவல்

0
140

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 18 பேர் பலியாகி இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியா தீவில் சமீபத்தில் சுமார் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 50-க்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

(Maalaimalar)

LEAVE A REPLY