இந்தியாவை எப்படி வென்றது இலங்கை? 5 முக்கிய காரணங்கள்

0
1147

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி தொடர் இலங்கையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இலங்கையில் நிலவிவரும் அசாதாரண நிலையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி இது என்பதால் அனைவரின் கவனமும் இப்போட்டியில் இருந்தது. இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற இவைதான் 5 முக்கிய காரணங்கள்.

இந்திய அணியின் மோசமான தொடக்கம்

dhawanமுதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை தொடக்கத்தில் சொற்ப ரன்களில் இழந்துவிட்டது. இரண்டு ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் மட்டும் எடுத்து இந்தியா தடுமாறியது. அணிக்கு நம்பிக்கை அளித்தது 90 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் மட்டும்தான்.

துல்லியமாக பந்துவீசிய குணதிலக, மெண்டிஸ்

174 ரன்கள் எடுத்த இந்திய அணி மேலும் ரன்கள் குவிக்க முடியாததற்கு முக்கிய காரணம் இலங்கை பந்துவீச்சாளர்கள் குணதிலக மற்றும் மெண்டிஸ் ஆகியோரே. இருவரும் சிக்கனமாக பந்துவீசியதுடன் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

குஷால் பெரேராவின் அதிரடி ஆட்டம்

Kusal Pereraஇலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான குஷால் பெரேரா 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். முக்கிய கட்டங்களில் இவர் விரைவாக எடுத்த ரன்களே இலங்கையின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

ரசிகர்களின் அமோக ஆதரவு

இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் முடிவை அரசு அறிவித்த போதிலும், நேற்றைய போட்டியில் மைதானம் ரசிகர்களால் நிரம்பியது. நாட்டில் நிலவும் தற்போதைய நிலையை பொருட்படுத்தாமல் இலங்கை அணிக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக ஆதரவு அந்த அணி வெற்றி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணம்.

இலக்கு தவறிய இந்திய பந்துவீச்சாளர்கள்

dddஇந்திய பந்துவீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் ஒருவர் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார். உனாட்கட், ஷர்துல் தாக்கூர் போன்ற பந்துவீச்சளர்கள் ஆட்டத்தின் முக்கிய கட்டங்களில் அதிக அளவில் ரன்களை வாரி வழங்கினர். இதனால் இலங்கை அணி 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

(BBC)

LEAVE A REPLY