மருதமுனையில் ஆர்ப்பாட்டம்: இரு பஸ்கள் மீது கல் வீச்சு; பயணிகள் சிலருக்கு காயம்

0
445

கண்டி-தெல்தெனிய பகுதியில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களை கண்டித்து இன்று (06) கிழக்கின் பல பகுதிகளில் ஹர்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் மருதமுனையில் ஹர்தாலுடன் ஆரப்பாட்டமும் நடைபெற்றுள்ளது. மருதமுனை பிரதான வீதியால் பயணித்துக்கொண்டிருந்த பஸ்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் சில பயணிகள் காயமடைந்ததாகவும், இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Image 2018-03-06 at 11.23.27 WhatsApp Image 2018-03-06 at 11.25.01

LEAVE A REPLY