உறுகாமம்-புதூர் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வீடுகள் சேதம்

0
175

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு – உறுகாமம்- புதூர் பிரதேசத்தில் திங்கட்கிழமை அதிகாலை 05.03.2018 காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சேனைப்பயிர்களும் துவம்சம் செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நள்ளிரவு வேளையில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் வீட்டின் சுவர்களை உடைத்து அங்கு மூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்லையும் சமையலறையிலிருந்த இதர உணவுப் பண்டங்களையும் உட்கொண்டுள்ளதுடன் மரவள்ளி மற்றும் வாழைத்தோட்டங்களை துவம்சம் செய்துள்ளன.

எனினும் வீட்டுரிமையாளர்கள் அங்கு தங்கியிருக்காததினால் உயிராபத்துக்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒருவாரகாலமாக தொடர்ச்சியாக உறுகாமம் – புதூர்ப் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் புரிவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது இடம்பெயர்ந்து சுமார் 25 வருடங்களின் பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள இம்மக்களுக்கு காட்டு யானைகளினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DSC_0005 DSC_0015

LEAVE A REPLY