மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் அத்தியட்சகராக மெண்டிஸ் தனது கடமைகளை பொறுப்பேற்பு

0
133

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் அத்தியட்சகராக எம்.என்.எஸ்.மெண்டிஸ் தனது கடமைகளை இன்று (05) திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சமன் எட்டவர கொழும்பு வடக்கு பகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அந்த இடத்திற்கு கம்பளை பிரதேசத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எம்.என்.எஸ்.மெண்டிஸ் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக(எஸ்.பி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் திங்கட்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டதுடன் அவருக்கு பொலிசாரின் அணி வகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.

இந்த வைபவத்தில் சமய பிரமுகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

DSC06836

LEAVE A REPLY