(Video) கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசல் மீது தாக்குதல்

0
1054

kandy-Katukasthotaசற்று நேரத்துக்கு முன்னர் சுமார் 25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் தாக்கப்பட்ட கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தற்பொழுது பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிருவாகத்தினருடனம் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கலந்தாலோசித்தார்.

இதேவேளை, பள்ளிவாசல் குண்டர்களால் முற்றாக சேதத்துக்குள்ளக்கப்பட்டதுடன், \பள்ளிவாசலுக்கு பொறுப்பான மௌலவி இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தப்பியதாகவும் நிருவாகத்தினர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து அமைச்சர், பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியினூடாக அங்கு தற்போதைய நிலைமை தொடர்பில் எடுத்துரைத்தார். தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மக்கள் காங்கிரஸின் இஷாக் ரஹ்மான் எம்.பி. மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில் ஆகியோரும் உடனிருந்தனர்.

LEAVE A REPLY