கண்டியில் முகாமிட்ட ஞானசார தேரர், டன் பிரசாத்…!

0
384

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும், டன் பிரசாத்தும் கண்டி திகன பகுதிக்குச் சேன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் இடம்பெற்ற சிங்கள முஸ்லீம் கலவரம் காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை உருவாக்கியதுடன் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஞானசார தேரரும், டன் பிரசாத்தும் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேலும், அங்கு சென்ற ஞானசார தேரர் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிங்கள இளைஞருக்கு அஞ்சலி செலுத்தும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

NEWS 2

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் நாளை 6 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஜப்பான் சுகுபா சம்போதி விகாரையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வேண்டி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான மணி விசாரணை இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு விடுக்கப்பட்டதுடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY