கண்டியில் ஊரடங்குச் சட்டம்

0
467

கண்டி, திகனயில் இடம்பெற்ற அமையின்மையையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டதால் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

இந்நிலையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதும் நிலைமை மோசமடைந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்போது கண்டி நிர்வாக மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது நாளை காலை 6 மணிவரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

(Virakesari)

WhatsApp Image 2018-03-05 at 20.02.05 WhatsApp Image 2018-03-05 at 20.02.27

LEAVE A REPLY