கட்டுகஸ்தோட்டையில் சற்று முன்னர் பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள் உடைப்பு…!

0
2380

நேற்றிரவு முதல் நிலவி வரும் வன்முறை சூழலின் எதிரொலியாக கட்டுகஸ்தோட்டையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி, முச்சக்கர வண்டிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் இனவாதிகளின் கல்வீச்சு மற்றும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் வாகனங்கள் சிலவும் தாக்குதலுக்குள்ளாகியுள்ள அதேவேளை அருகில் உள்ள பகுதிகளிலும் பலரால் அச்சறுத்தல் ஏற்படுத்தி வருவதாக அறியமுடிகிறது.

எனினும், விசேட அதிரடிப்படையினரைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தொடர்ந்து தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY